ஈரான் உச்சநீதிமன்ற வளாகத்தில் இரு நீதிபதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெஹ்ரானில் அமைந்துள்ள உச்சநீதிமன்றத்தின் வளாகத்துக்குள் நுழைந்த மர்ம நபர், நீதிபதிகள் அலி ரசினி- முகமது மோஹிசே ஆகியோர்தங்கியிருந்த ஓய்வறைக்குள் நுழைந்து, அவர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். தொடர்ந்து தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.