சூரி நடிப்பில் உருவாக உள்ள மாமன் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தை ‘விலங்கு’ வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்க உள்ள நிலையில், சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க உள்ளார். தக்லைப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.