சூர்யா 45 திரைப்படத்திற்கு கட்சி சேர, ஆச கூட ஆல்பம் பாடல் பிரபலம் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 45' என பெயரிடப்பட்டுள்ளது.டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். இத்திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியானபோதே ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஏ.ஆர்.ரகுமான் விலகியுள்ளநிலையில், புதிய இசையமைப்பாளராக சாய் அபயங்கரை படக்குழு ஓப்பந்தம் செய்துள்ளது.