இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் ஆதில் ரஷீத்-ஐ இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் புகழ்ந்துள்ளார். 3ஆவது டி20 போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து பேசிய அவர், ஆதில் ரஷீத் உண்மையிலேயே உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர் தான் என்றார். தங்களை ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்யவே ஆதில் அனுமதிக்கவில்லை என அவரின் பவுலிங்கை மெச்சி பேசினார்.