புகழ்பெற்ற தபேலா இசைக்கலைஞர் ஜாகீர் உசேன் சான் பிரான்சிஸ்கோ மருத்துவமனையில் காலமானதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தி உள்ளனர். 73 வயதான ஜாகீர் உசேன், இதயம் தொடர்பான பிரச்சனையால் ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இவர் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் , பத்ம விபூஷன் விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.