இந்தியாவ தாண்டி, தன்னோட புகழ உலகமறிய செஞ்சுட்டு வர்ற நடிகரும் ரேசருமான அஜித்குமார், மலேசியாவுல சுமார் 500 ரசிகர்களோட ஒரே நேரத்தில செல்ஃபி எடுத்துக்கிட்டதா சொல்லப்படுது. தனக்குன்னு ஒரு கார் பந்தய ரேசிங் அணிய உருவாக்குன நடிகர் அஜித்குமார், கடந்த இரு ஆண்டுகளாவே ரேசிங்ல தான் அதிக கவனம் செலுத்திட்டு இருக்குறாரு. தொடர் விடாமுயற்சினால அஜித்குமாரோட அணி வெளிநாடுகள்ல நடந்த முக்கியமான மூன்று போட்டிகள்ல வெற்றிக் கனியையும் பறிச்சது. ரெண்டு கார் பந்தயங்கள்ல மூன்றாவது இடமும், ஒரு பந்தயத்துல இரண்டாவது இடமும் பிடிச்சிருந்தாங்க.இந்த நிலையில தான் அஜித்குமாரோட விடாமுயற்சிய பாராட்டி கடந்த மாதம் இத்தாலில நடந்த நிகழ்ச்சி ஒண்ணுல அவருக்கு ஜெண்டில்மேன் ஆஃப் தி இயர் விருதும் வழங்கப்பட்டுச்சு. இப்படி ரேசிங் மேல இருக்கக் கூடிய தன்னோட ஆர்வத்துனால ஒவ்வொரு நாடுகளுக்கா பயணப்படக்கூடிய அஜித்குமார், அப்பப்போ தன்னோட குடும்பத்தினரோட ஃபோட்டோ எடுத்துக்கிறது வழக்கம். ஏற்கெனவே தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானவர்ங்கிறதுனால அஜித்குமார் எந்த நாட்டுக்கு போனாலும் அங்க இருக்கக் கூடிய தமிழ் ரசிகர்கள் அவர் பெயர சொல்லி சியர்ஸ் பண்ணுறதும், அவர படம் பிடிக்கிறதுமா இருப்பாங்க. இப்படியான சூழல்ல தான் மலேசியாவுல இருக்கிற செபாங் (Sepang) பகுதியில நடக்கிற போட்டிக்காக அஜித்குமார் அங்கையே தங்கி பயிற்சி முடிச்சிட்டு வந்தப்போ கொத்து கொத்தா வரிசை கட்டி வந்த ரசிகர் கூட்டம் அவரோட செல்ஃபி எடுக்கணும்னு ஆவலோட காத்திட்டு இருந்திருக்குது. கிட்டத்தட்ட 12 மணி நேரம் நடக்க இருக்கிற ரேசிங்காக பயிற்சி எடுத்துட்டு நேரா வந்துட்டு இருந்த அஜித்குமார மடக்கி ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக்கலாம்னு கேக்க கொஞ்சம் கூட சோர்வ வெளிக்காட்டிக்காம எல்லாரோடையும் தனித்தனியா செல்ஃபி எடுத்திருக்காரு. இது சம்பந்தமான வீடியோ கூட இணையத்துல பரவிட்டு இருக்குது. இப்பிடி சுமார் 500க்கும் மேற்பட்ட ரசிகர்களோட அஜித்குமார் தனித்தனியா செல்ஃபி எடுத்துக்கிட்டதா சொல்லப்படுது. இத பார்த்த ரசிகர்கள், மலேசியா முழுக்கவுமே அஜித்குமாரோடதுன்னு பதிவிட்டுட்டு இருக்காங்க. அஜித்குமாரோட படங்கள் தொடர்ந்து வெளியாகலன்னாலும், அவரு சோசியல் மீடியாவுலையே இல்லன்னாலும், ஏன் இந்தியாவுலையே இல்லன்னாலும் கூட இப்பிடி அவரு அர்ப்பணிப்போட, கனிவோட நடந்துக்கிர்றது திரும்ப திரும்ப அவரோட ரசிகர்களுக்கு ஆர்வத்த தூண்டுறதோட அவங்கள உற்சாகமடையவும் வைக்கிது.