தொழில் நுட்ப வளர்ச்சியில், நாட்டிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். சென்னை வர்த்தக மையத்தில் Umagine TN - 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து பேசியவர், நவீனத்தை நோக்கிய பாய்ச்சலுடன் தமிழக அரசு தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுவதாகவும், தொழில்நுட்ப வளர்ச்சி பயணத்தில் இது முக்கியமான தருணம் என்றும் கூறினார். தொழில்நுட்பத்தை சமூக முன்னேற்றத்திற்கான கருவியாக பார்க்க வேண்டும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், 32 மாவட்டங்களில் இருந்து மென்பொருள் ஏற்றுமதி நடப்பதாக மத்திய அரசின் புள்ளி விபரம் கூறுவதாக தெரிவித்தார். இதையும் பாருங்கள் - குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 + பரிசு தொகுப்பு