பரபரப்பான அரசியல் சூழலில் தமிழகச் சட்டப்பேரவை இன்று காலை 9:30 மணிக்கு கூடுகிறது.இதில் 2024-25 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி கிராமத்தில் இந்துஸ்தான் சிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.