இந்தியாவில் நெக்ஸான் CNG டார்க் மாடல் காரை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. வெளிப்புறம் தொடங்கி உட்புறம் வரை அனைத்தும் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலை 12 லட்சத்து 70 ஆயிரத்திலிருந்து தொடங்குகிறது. ப்ரீமியம் வசதிகள், காஸ்மெடிக் மாற்றங்களுடன் 3 உயர்நிலை வேரியன்ட்களில் மட்டும் இந்த டார்க் மாடல் வெளியிடப்பட்டுள்ளது.