டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்காக, அரிட்டாபட்டியில் முதலமைச்சருக்கு இன்று பாராட்டு விழா நடைபெறுகிறது. டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் குடியரசு தின நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, அரிட்டாபட்டி கிராமத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செல்கிறார்.