மூன்று நாள் பயணமாக, இந்தியா வந்த அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, தனது இந்திய பயணம் குறித்து மனம் திறந்துள்ளார். அதில், "டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தாவிற்கு மேற்கொண்ட பயணங்கள் அற்புதமானவையாக இருந்தது. எனது சுற்றுப்பயணம் அனைத்திற்கும் நீங்கள் அளித்த அன்பான வரவேற்பு, சிறந்த விருந்தோம்பல் மற்றும் அனைத்து அன்பு வெளிப்பாடுகளுக்கும் நன்றி. இந்தியாவில் கால்பந்துக்கு ஒரு பொன்னான எதிர்காலம் அமையும் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.