தமது பிறந்தநாளில் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர், இபிஎஸ், அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக நண்பர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றிதம்மை வாழ வைக்கும் தெய்வங்களான அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவுரஜினி வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது: என்னுடைய பிறந்த நாளில் வாழ்த்து தெரிவித்த அருமை நண்பர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள், திரையுலக நண்பர்கள், ஊடகத் துறையினர் மற்றும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான அனைத்து ரசிகப் பெருமக்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ரஜினி பதிவிட்டுள்ளார்.