இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, 4க்கு 1 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் குவித்தது. 248 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 97 ரன்கள் ஆல் ஆவுட் ஆனது.