பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் இஸ்ரோவின் கைவசம் உள்ள 687 மெஹாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை 5ஜி மற்றும் 6 ஜி சேவைக்காக திருப்பி விட மத்திய கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஸ்பெக்டரம் தேவையை ஈடுகட்டும் விதமாகவும், வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் அவற்றுக்கு 2000 மெகாஹர்ட்ஸ் அலைவரிசையை வழங்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.