பீகார் தலைநகர் பாட்னாவில் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெற்ற 70ஆவது தேர்வை புதிதாக நடத்த வலியுறுத்தி இளைஞர்கள் சாலையில் போராட்டத்தில் குதித்தனர். ஏராளமான இளைஞர்கள் சாலையில் இறங்கி ஊர்வலமாக சென்றதால் போக்குவரத்து முடங்கியது. போலீசார் தடுத்தும் அதனை மீறி இளைஞர்கள் ஊர்வலமாக சென்ற நிலையில், தடியடி நடத்தினர்.