சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென் இடையிலான 8வது சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தது. இதுவரை முடிந்துள்ள 8 போட்டிகளில் இருவரும் தலா 4 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். 7.5 புள்ளிகளை முதலில் பெறுபவரே உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வார் என்பது குறிப்பிடத்தக்கது