டெல்லி சட்டசபை தேர்தலுக்கான பாஜகவின் 3-வது மற்றும் இறுதி கட்ட தேர்தல் வாக்குறுதி அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார். அதில், 3 வருடத்திற்குள் யமுனை நதி சுத்தப்படுத்தப்படும் என்றும், கையால் மலம் அள்ளும் முறை 100 சதவீதம் ஒழிக்கப்படும் என்றும், 100 சதவீதம் மின்சார பேருந்து சேவையாக மாற்றப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.