16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் காலை 11 மணிக்கு முன்னும், இரவு 11 மணிக்கு பின்னும் திரைப்படம் பார்க்க தடை விதித்து தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறுவர்கள் காலை 11 மணிக்கு முன்பும், இரவு 11 மணிக்கு பின்னும் திரைப்படம் பார்ப்பதால் தூக்கமின்மை உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், குழந்தைகளுக்கான மனநல மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி விஜயேசன் ரெட்டி இந்த இடைக்கால தடையை விதித்து உத்தரவிட்டார்.