டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது. 70 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட டெல்லிக்கு வரும் 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தலைநகரில் ஆட்சியை பிடிப்பதற்காக பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆளும் ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவும் நிலையில், வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.