இஸ்ரேல் - காசா இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இது குறித்த அறிவிப்பை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் மஜித் அல்-அன்சாரி, காசா போர் நிறுத்தம் இன்று காலை 8.30 மணிக்கு அதாவது இந்திய நேரப்படி 12 மணிக்கு அமலுக்கு வருவதாகவும், அச்சமயம் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.