ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரஜா பலனா - விஜயோத்சவலு கொண்டாட்டத்தின் ஏர் ஷோ நிகழ்ச்சியில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்று வான் சாகசங்களை கண்டு ரசித்தார். மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்த விமானங்கள் வானில் வட்டமடித்தும் வண்ண புகையை உமிழ்ந்தும் பார்வையாளர்களை வியக்க வைத்தன.