கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த இளைஞர்கள். திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து இளைஞரை சுட்டுக் கொன்ற மற்றொரு இளைஞர். கொலைக்கு பின் இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை பதிவிட்டு கொலைக்கான காரணத்தை தெரிவித்த கொலையாளி. இளைஞரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தது ஏன்? நடந்தது என்ன? Cafeல் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இருதரப்பினர்Mr King Lounge and Cafe-ங்குற கடையில உட்காந்து இளைஞர்கள் சிலர் பேசிட்டு இருந்தாங்க. அப்ப திடீர்ன்னு ரெண்டு தரப்புக்கு இடையில பயங்கர மோதல் ஏற்பட்டிருக்கு. அப்ப மறைச்சு வச்சுருந்த துப்பாக்கிய எடுத்த நபர் ஒருத்தரு, பைசான்-ங்குற 24 வயசு இளைஞர நெத்தியிலையும், நெஞ்சுலையும் சுட்டுருக்காரு. அடுத்து கத்திய வச்சு பைசானை சரமாரியா கையிலையே வெட்டிட்டு தப்பிச்சு போய்ட்டாரு. இதுல சம்பவ இடத்துலையே சுருண்டு விழுந்த பைசான் ரத்த வெள்ளத்துல துடிதுடிக்க உயிரிழந்துட்டாரு. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சாங்க. அதுக்கப்புறம் கொலையாளிய கண்டுபிடிக்க அந்த ஏரியாவுல உள்ள மொத்த சிசிடிவி காட்சிகளையும் எடுத்து ஆய்வு பண்ணிருக்காங்க போலீஸ். இதுக்கிடையில, இன்ஸ்டாகிராம்ல வீடியோ ஒரு திடீர்ன்னு வைரலாகிருக்கு. அதுல பேசுன மொயின் குரேஷி-ங்குற இளைஞர் நான் தான் பைசான துப்பாக்கியால சுட்டுக் கொன்னதா சொல்லிருக்காரு. அந்த வீடியோவ வச்சு போலீசார் கொலையாளிய வலைவீசி தேடிட்டு இருக்காங்க. Related Link இரவில் மனைவியுடன் உடலுறவு, மகனுக்கு நடந்த கொடூரம் மொயின் குரேஷியை கன்னத்தில் அறைந்த பைசான்டெல்லி மௌஜ்பூர் பகுதிய சேந்த பைசானும், மொயின் குரேஷியும் நண்பர்கள். ஆனா அடிக்கடி இவங்களுக்குள்ள மோதலும் ஏற்பட்டுட்டு இருந்துருக்கு. 6 மாசத்துக்கு முன்னாடி ரெண்டு பேரும் தங்களோட ப்ரண்ட்ஸ்களோட ஒரு நிகழ்ச்சிக்கு போய்ருக்காங்க. அங்க வச்சு பைசானுக்கும், மொயின் குரேஷிக்கும் பிரச்னை ஏற்பட்டிருக்கு. அப்ப பைசான், மொயின் குரேஷிய கன்னத்துலையே அறைஞ்சுருக்காரு. ஆனா மொயின் குரேஷி எந்த ஒரு எதிர் வினையும் தொடுக்காம அங்கருந்து கிளம்பிட்டாரு. Related Link பெண் மருத்துவருக்கு HIV ஊசியை செலுத்திய கும்பல் இதனால பைசானோட ப்ரண்ட்ஸ் மொயின் குரேஷிய கிண்டல் பண்ண ஆரம்பிச்சுருக்காங்க. அதுமட்டும் இல்லாம மொயின் குரேஷி ரோட்ல போகும் போதும், வரும்போதெல்லாம் பைசானும் அவனோட நண்பர்களும் ஆபாசமா பேசுறது, பெண்கள் முன்னாடி கேலி பண்றதுன்னு அவர ரொம்ப கிண்டல் பண்ணிருக்காங்க. இதனால கடும் கோபமான மொயின் குரேஷி, பைசான கொலை செய்ய திட்டம் போட்ருக்காரு. அதுபடி Mr King Lounge and Cafe-ங்குற கடையில பைசான் இருக்குறத தெரிஞ்சுக்கிட்ட மொயின் குரேஷி, துப்பாக்கிய எடுத்துட்டு தன்னோட நண்பர்கள் கூட அங்க போய்ருக்காரு. அப்ப திடீருன்னு ரெண்டு தரப்புக்கு இடையில பிரச்னை ஏற்பட்டிருக்கு.இன்ஸ்டாவில் வீடியோ பதிவுஅந்த நேரத்துல மறைச்சு வச்சுருந்த துப்பாக்கிய எடுத்த குரேஷி, பைசான நெத்தியிலையும், நெஞ்சுலையும் சுட்டுட்டு தப்பிச்சு போய்ட்டாரு. அடுத்து இன்ஸ்டாகிராம்ல வீடியோ ஒன்ன பதிவிட்டுருக்காரு மொயின் குரேஷி. அதுல இந்த கொலை சம்பவத்துக்கும், என் குடும்பத்தினருக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை, பணம் தொடர்பான பிரச்னையும் இல்லை, 4 மாசத்துக்கு முன்னாடி பைசான் என்ன கன்னத்துல அறைஞ்சான், அதுக்கு பழிவாங்க நான் அவன கொலை செஞ்சேன்னு வீடியோவுல தெரிவிச்சுருக்காரு. இதபாத்த போலீஸ் தலைமறைவா இருக்குற மொயின் குரேஷிய வலைவீசி தேடிட்டு இருக்காங்க. ஆனா கொலையான பைசானோட சகோதரர், இந்த கொலைக்கு பண பிரச்னை தான் காரணம்ன்னு சொல்லிருக்காரு. இதனால கொலையாளியான மொயின் குரேஷி பிடிப்பட்டதுக்கு அப்புறம் தான் இந்த கொலைக்கு முன்விரோதம் காரணமா? அல்லது வேற ஏதாவது பிரச்னையான்னு தெரியவரும்ன்னு சொல்லிருக்காங்க. Related Link 4 வயது மகளின் மூச்சை நிறுத்திய தந்தை