மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் சிலை உடைக்கப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலாளர் இ.பி.எஸ். கண்டனம் தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆரின் புகழையும், அவரது கொள்கைகளையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள் செய்த இழிசெயலாக கருதுவதாக தெரிவித்துள்ளார். சிலையை சேதப்படுத்துவதன் மூலம் அவரின் சாதனைகளையும், புகழையும் மக்கள் மனதில் இருந்து குறைக்கவோ மாற்றவோ முடியாது என கூறியுள்ளார். இதுபோன்ற செயல்கள் மூலம் பொது அமைதியை சீர்குலைக்க நினைக்கும் சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் இ.பி.எஸ். வலியுறுத்தியுள்ளார்.