உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது பராமரிப்பாளரை மருத்துவமனை சென்று பார்த்த யானையின் பாசப் போராட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி காண்போரின் கண்களை குளமாக்கின. நுழைவு வாசல் குறுகியதாக இருந்த போதும், மண்டியிட்டப்படியே மெதுவாக ஊர்ந்து உள்ளே சென்ற யானை, அவரை தனது தும்பிக்கையால் தட்டி எழுப்ப முயன்றது.