புஷ்பா 2 திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், படக்குழு சமூக வலைதளத்தில் பகிர்ந்த திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இத்திரைப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி, மலையாளம் மொழிகளில் வெளியான நிலையில், அல்லு அர்ஜுன் மற்றும் பகத் பாசிலுக்கு இடையேயான வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.