இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் எடுத்தது. இலக்கை நோக்கி பயணித்த இந்திய அணி, 12.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.