உத்தரபிரதேசம்... கடனாக கொடுத்த 500 ரூபாயை நண்பனிடம் திருப்பிக் கேட்ட இளைஞர். பணத்தை கொடுக்க மறுத்ததால் வெடித்த பிரச்சனை. உடல் முழுவதும் பெல்ட்டால் அடித்து சித்ரவதை செய்ததோடு, செங்கல்லால் தலையில் அடித்து நண்பனை கொலை செய்த இருவர். சடலத்தை கடித்து குதறி வைத்த நாய். வெறும் 500 ரூபாய்க்காக நண்பனை கொன்ற 2 இளைஞர்களும் சிக்கினார்களா? பின்னணி என்ன?உத்திரபிரதேச மாநிலம், கான்பூர் கோவிந்த் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் ராகுல். இவரு தன்னோட நண்பர் காம்தாக்கிட்ட 500 ரூபாய் கடனா வாங்கிருக்காரு. பணம் வாங்கி சில மாசங்கள் ஆகியும் நண்பனுக்கு பணத்த திரும்ப கொடுக்கவே இல்ல ராகுல். பலமுறை கேட்டுப்பாத்த ராகுல், அடுத்து கேக்குறதையே விட்டுட்டாரு. இதுக்கு மத்தியில ராகுல், காம்தா, நண்பன் மோகித் 3 பேரும் சேர்ந்து மது குடிக்கிறதுக்காக ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு போயிருக்காங்க. மது வாங்குறதுக்கு காம்தாவிம் மோதித்தும் தான் பணம் குடுத்துருக்காரு. தன்கிட்ட பணம் இல்லனு சொன்ன ராகுல் அடுத்தமுறை தர்றதா சொல்லிருக்காரு. அதுக்கு சரினு நண்பர்கள் ரெண்டுபேரும் சொன்னதும் சந்தோஷமா மது குடிக்கப்போயிருக்காரு ராகுல். காம்தாவுக்கு லேசா போதை ஏற ஆரம்பிச்சதும் ராகுலை நோக்கி, எப்போதுமே ஓசியிலதான் மது குடிக்கிற? அடுத்த முறை பணம் தரேனு பலமுறை சொல்றதோட சரி தரவேமாட்டனு சீண்டிருக்காரு. அப்போ, அடுத்தமுறை கண்டிப்பா நான் தந்துருவேனு ராகுல் சொன்னதும் கத்தி சத்தம்போட்டு சிரிச்ச காம்தா 500 ரூபாய் வாங்கி பல மாசம் ஆச்சு. அதேயே குடுக்க முடியலனு கிண்டலடிச்சிருக்காரு. அப்போ, நான் பெட்ரோல் பங்க்ல வேலைக்கு சேர்ந்து சில நாட்கள்தான் ஆகுது, சம்பளம் வந்ததும் குடுக்குறேனு சொல்லிருக்காரு ராகுல். ஆனாலும், காம்தா கிண்டல் பண்றத நிறுத்தவே இல்ல. அதனால கடுப்பான ராகுல் பணத்த குடுக்க முடியாதுனு சொல்லிருக்காரு. அப்போ, ஆத்திரப்பட்ட காம்தா 500 ரூபாயை குடுத்துட்டு இந்த வீராப்பு பேச்செல்லாம் பேசணும்னு சொல்ல சண்டை பெரிய அளவுல வெடிச்சிருக்கு.ஒருகட்டத்துல கோவத்தோட உச்சிக்குப்போன காம்தா தன்னோட பெல்ட்டால ராகுலை அடிச்சிருக்காரு. அப்போ போதையில இருந்த மோகித்தும் ராகுலும் காம்தா கூட சேர்ந்து அடிச்சிருக்காரு. அடுத்து ராகுல் அணிஞ்சிருந்த ஆடைய கழற்றிட்டு பெல்ட்டால விடாம அடிச்ச ரெண்டுபேரும் தலையில செங்கல்ல தூக்கிப்போட்டு கொன்னுருக்காங்க. அதுக்குப்பிறகு சடலத்த அப்படியே போட்டுட்டு அங்க இருந்து ரெண்டுபேரும் தப்பி ஓடிட்டாங்க. அங்க இருந்த சில நாய்கள் ராகுலோட சடலத்த இழுத்துட்டு வந்து சாலையோரம் போட்டு கடிச்சி குதறிருக்குது. தகவல் தெரிஞ்சி அங்க வந்த போலீசார் காம்தா, மோகித் ரெண்டுபேரையுமே சம்பவம் நடந்த பகுதியில இருந்து 500 மீட்டர் தூரத்துலயே அரெஸ்ட் பண்ணிட்டாங்க.