மனைவி தற்கொலை செய்துவிட்டதாகக் கூறி கண்ணீர் சிந்திய கணவன். பெண்ணின் உடலைக் கண்டு கதறித்துடித்த உறவினர்கள். உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்த ரத்தக்காயத்தால் எழுந்த சந்தேகம். அடுத்தடுத்த விசாரணையில் வெளிவந்த உண்மை. கட்டிய மனைவியை கணவனே கொன்று தூக்கில் தொங்கவிட்டது ஏன்? பின்னணி என்ன? வீட்டு வாசலில் நின்று அழுது கொண்டிருந்த நபர் காலங்காத்தால, வீட்டு வாசல்ல நின்னு ஒருத்தரு கதறி அழுதுட்டு இருந்துருக்காரு. பக்கத்து வீட்டுக்காரங்கலாம், ஏன் பா, எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்கிங்கன்னு கேட்டுருக்காங்க. அதுக்கு, வழக்கம்போல நைட்டு எனக்கும், என் மனைவிக்கும் சண்ட வந்துச்சு, அந்த கோவத்துல நடுராத்திரி வீட்டவிட்டு வெளியேறி, பக்கத்துல உள்ள ஒரு மரத்துல தூக்கு மாட்டிட்டு தற்கொலை பண்ணிக்கிட்டான்னு சொல்லி ஆதேஷ் கண்ணீர் வடிச்சிருக்காரு. உடனே அந்த பக்கத்துவீட்டுக்காரங்க ஆதேஷ் சொன்ன இடத்துக்கு போய் பாத்துருக்காங்க. அங்க, அவரோட மனைவி பார்வதி தூக்குல தொங்கி சடலமா கிடந்தத பாத்து அதிர்ச்சியில உறைஞ்சு போய் நின்னுருக்காங்க. தங்கை பார்வதியின் மரணத்தில் சந்தேகமடைந்த அக்கா விஷயம் தெரிஞ்சு சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ், ஆதேஷ்கிட்ட விசாரணை நடத்திட்டு இருந்தாங்க. இதுக்கு இடையில, பார்வதியோட அக்காவும், சொந்தக்காரங்களும் வந்து கதறி அழுதாங்க. அப்பதான், பார்வதியோட அக்கா கண்ணுக்கு, அவங்க உடம்புல அங்க அங்க காயம் இருந்தது தெரிஞ்சிருக்கு. அதுக்கப்புறம்தான், இவ்வளவு நேரமா ஆதேஷ் சொன்னது எல்லாமே பொய்ங்குறது கொஞ்சம் கொஞ்சம் தெரிய ஆரம்பிச்சிருக்கு. கூலி தொழில் செய்து வந்த ஆதேஷுக்கு தகாத உறவு பீகார் மாநிலம், பூர்னியாவ சேர்ந்த ஆதேஷுக்கும், பார்வதிக்கும் கடந்த பத்து வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் நடந்திருக்குது. இந்த தம்பதிக்கு ரெண்டு மகள் இருக்காங்க. இதுக்கு இடையில, ஆதேஷுக்கும், ஏற்கெனவே திருமணமாகி கணவர விட்டு பிரிஞ்சு வாழ்ந்துட்டு இருக்குற 25 வயசு இளம்பெண்ணுக்கும் இடையில பழக்கம் ஏற்பட்டிருக்கு. இந்தப் பழக்கம் நாளடைவுல நெருக்கமாகி, அது திருமணத்த கடந்த உறவா மாறிருக்கு. கடந்த ரெண்டு வருஷத்துக்கு மேல, ஆதேஷும், அந்த இளம்பெண்ணும் தகாத உறவுல இருந்துட்டு வந்ததா சொல்லப்படுது. கணவன் ஆதேஷை கையும் களவுமாக பிடித்த பார்வதி கடந்த சில மாசங்களுக்கு முன்னாடி, தன்னோட கணவர் ஆதேஷ், வேறொரு பொண்ணுகூட தகாத உறவு வச்சிருக்குற விஷயம், மனைவி பார்வதிக்கு தெரிஞ்சிருக்கு. வெறும் சந்தேகத்த வச்சு பேசுனா தப்பாகிரும், கையும் களவுமா பிடிச்சாதான் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்ட முடியும்னு நினச்ச பார்வதி, ஆதேஷுக்கு தெரியாம அவர ஃபாலோ பண்ணிருக்காங்க. கூடவே நெருங்குன உறவினர்கள் ஒரு சிலரையும் கூப்டு போய்ருக்காங்க. அதே பகுதில உள்ள இளம்பெண்ணோட வீட்டுல, கணவர் ஆதேஷ், அந்த பொண்ணுகூட தனிமையில இருந்தப்போ, பார்வதி அவங்கள கையும் களவுமா பிடிச்சுருக்காங்க. இளம்பெண் வீட்டுல வச்சு வசமா மாட்டிக்கிட்ட ஆதேஷ், மனைவி முன்னாடியும், உறவினர்கள் முன்னாடியும் கூனிக்குருகி போய் நின்னுருக்கார். காதலன் ஆதேஷுக்கு உத்தரவுபோட்ட இளம்பெண் தகாத உறவ கைவிட்டுட்டு ஒழுங்கா குடும்பத்த பாருன்னு சொந்தக்காரங்களாம் ஆதேஷ கண்டிச்சிருக்காங்க. இவ்வளவு பிரச்சினை நடந்ததால, ஆதேஷ், கொஞ்ச நாள் இளம்பெண்கூட பேசாம, பழகாம இருந்துருக்காரு. ஆனா, ஒருசில மாசத்துக்கு அப்புறம் திரும்பவும் இளம்பெண் கூட பழக ஆரம்பிச்சிருக்காரு. அப்போ, எல்லார் முன்னாடி வச்சும் உன் மனைவி என்ன அவமானப்படுத்திட்டா, அவள கொன்னாதான் இனிமே உன்கூட பேசுவேன் பழகுவேன்னு காதலியான அந்த இளம்பெண், ஆதேஷ் கிட்ட திட்டவட்டமா சொல்லிருக்காங்க. காதலியோட வார்த்தைய வேதவாக்கா நினச்ச ஆதேஷ், மனைவிய தீர்த்துக்கட்ட பிளான் போட்டுருக்கான். மதுபோதையில் வீட்டிற்கு சென்று மனைவியிடம் தகராறு சம்பவத்தனைக்கு நைட்டு, மதுபோதையில வீட்டுக்கு வந்த ஆதேஷ், தூங்கிட்டு இருந்த மனைவி பார்வதிய கண்மூடித்தனமா தாக்குனது மட்டுமில்லாம, அவங்க முகத்துல தலையணைய வச்சு அழுத்தி துடிதுடிக்க கொலை பண்ணிருக்கான். இதெல்லாம் நடந்தது நைட் 11 மணிக்கு. அடுத்து, ரெண்டு மணி நேரம் கழிச்சு, போதை தெளிஞ்சதுக்கு அப்புறம், மனைவிய கொன்னுட்டோமேன்னு நினச்சு ஆதேஷ் பதற்றமடஞ்சிருக்கான். பார்வதி குடும்ப பிரச்சனையால வீட்டவிட்டு வெளியேறி தற்கொலை பண்ணிக்கிற மாதிரி செட்டப் பன்றதுக்காக, சடலத்த பக்கத்துல உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு கொண்டுபோய் அங்கவுள்ள மரத்துல கயிற கட்டி தூக்குல தொங்கவிட்டுருக்கான். அதுக்கப்புறம், விடிஞ்சதும் அக்கம் பக்கத்துல உள்ளவங்கள கூப்டு, என் மனைவி தூக்குல தொங்கிட்டதா சொல்லி அழுது நாடகமாடிருக்காரு. ஆதேஷை கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ் ஆனா, பார்வதியோட உடம்புல இருந்த சின்ன சின்ன ரத்தக்காயத்த பாத்து, அவங்களோட அக்காவுக்கு டவுட் வந்திருக்கு. ஏன்னா, ஆதேஷுக்கு வேற ஒரு பொண்ணுகூட பழக்கம் ஏற்பட்டதுல இருந்தே, தெனமும் குடிச்சிட்டு வந்து பார்வதிய அடிச்சு கொடுமை பண்ணதாவும், இத பத்தி என் தங்கச்சி என்கிட்ட அழுது புலம்பிருக்கான்னும் அவங்க அக்கா போலீஸ் கிட்ட சொல்லிருக்காங்க. அதன் அடிப்படையில, போலீஸ், ஆதேஷ கூப்டு விசாரிச்சிருக்காங்க. ஆனா அப்பவும் அவன் உண்மைய ஒத்துக்காம, அது இதுன்னு மலுப்பலாவே பதில் சொல்லிருக்கான். இதுக்கு இடையில, பார்வதியோட போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்ல, அவங்க, தூக்கு மாட்டிட்டு தற்கொலை பண்ணிக்கலன்னும், யாரோ அவங்கள கழுத்த நெரிச்சு கொன்னுருக்காங்கன்னும், குறிப்பிடப்பட்டிருந்துருக்கு. அதுக்கப்புறம் போலீஸ் நடத்துன கிடுக்குப்பிடி விசாரணையில, ஆதேஷ், உண்மைய ஒத்துக்கிட்டான். விசாரணைக்கு அப்புறம் போலீஸ், ஆதேஷ அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல அடச்சிட்டாங்க. Related Link மாணவிகளை நாசமாக்கிய வழக்கில் தீர்ப்பு