கர்நாடகா... துணியை காய வைப்பதற்காக மொட்டை மாடிக்கு சென்ற பெண். மாடியில் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளம்பெண்ணின் சடலத்தை பார்த்து பேரதிர்ச்சி. செல்போன் சிக்னலை வைத்து துப்பு துலக்கிய காவல்துறையினர். கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த இளம்பெண் யார்? கொலைக்கான பின்னணி என்ன? கர்நாடக மாநிலம், விஜயநகர்ல உள்ள சப்லகட்டா-ங்குற பகுதிய சேர்ந்தவங்க 28 வயசான உமா. இவங்களுக்கும் ஆந்திராவ சேர்ந்த ராமாஞ்சேநயா-ங்குறவருக்கும் கடந்த 12 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் நடந்துருக்கு. இந்த தம்பதிக்கு மொத்தம் மூணு மகன்கள் உள்ள நிலையில, கணவன் - மனைவி இடையில அடிக்கடி சண்ட வந்துருக்கு. ஒரு கட்டத்துல ரெண்டு பேரும் விவாகரத்து வாங்கிட்டு பிரிஞ்சிட்டாங்க. அதுக்குப்பிறகு, தன்னோட மகன்களோட தாய் வீட்டுல வசிச்சிட்டு வந்த உமா, சப்லகட்டாவுல உள்ள ரயில்வே கேண்டின்ல வேலை பாத்துட்டு இருந்தாங்க. இந்த சூழல, உமாவுக்கும், அதே ஏரியாவ சேர்ந்த காஜா உசேன்-ங்குற இளைஞர்கூட பழக்கம் ஏற்பட்டுருக்கு. ஆரம்பத்துல நண்பர்களா பழகுன ரெண்டு பேரும் எல்லை மீறி பழகிருக்காங்க. உமாவும், காஜா உசேனும் அடிக்கடி வெளியூர்களுக்கு போய் தனிமையில சந்திச்சிருக்காங்க. இதுக்கு இடையில, உமா, காஜா உசேன்கிட்ட இருந்து கடனா பணம் வாங்கிருக்காங்க. இந்த பணத்த காஜா உசேன் திருப்பி கேக்க, உமா அப்ப தரேன் இப்ப தரேன்னு அலைக்கழிச்சதா சொல்லப்படுது. அதனால, கடுப்பானவரு உமாகிட்ட பணம் கேட்டு சண்ட போட்டுருக்காரு. காஜா உசேன் பணம் கேட்டு சண்டை போடுறப்பல்லாம் உமா, அவருக்கிட்ட அன்பா பேசி சமாளிச்சிருவாங்களாம். அது காஜா உசேனுக்கு ஆத்திரத்த ஏற்படுத்தவே, உமாவ தகாத வார்த்தைகளால பேசி தன்னோட பணத்த திருப்பி கேட்டுருக்காரு. அதுக்கு, உமா தன்கிட்ட இப்ப பணம் இல்லன்னு திமிரா சொன்னதா சொல்லப்படுது. அதுமட்டுமில்லாம, காஜா உசேன்கூட பழைய மாதிரி பேசாம அவாய்டு பண்ணிருக்காங்க. அது காஜா உசேனுக்கு உச்சக்கட்ட கோபத்த ஏற்படுத்திருக்குது. அதனால, சம்பவத்தனைக்கு, நைட்டு உமாவுக்கு ஃபோன் பண்ண காஜா உசேன் தனிமையில இருக்குறதுக்காக கூப்பிட்டுருக்கான். தன்னோட வீட்டு பக்கத்துல உள்ள காலி இடத்துக்கு உமாவ வரவச்சவன், அவங்களோட தனிமையில இருந்துருக்கான். அதுக்குப்பிறகு, தான் கொடுத்த பணத்த பத்தி கேட்டுருக்கான். அப்போ, ரெண்டு பேத்துக்கும் இடையில பயங்கர வாங்குவாதம் ஏற்பட்டுருக்கு. அப்போ, திடீர்னு தான் மறைச்சு வச்சிருந்த கத்திய எடுத்து உமாவோட கழுத்த கத்தியால அறுத்து துடிக்க துடிக்க கொன்னுருக்கான். அதுல, உமாவுக்கு அதிகபடியான ரத்தம் வெளியேறி சம்பவ இடத்துலேயே உயிரிழந்துட்டாங்க. அதுக்குப்பிறகு, உமா சடலத்த பக்கத்து வீட்டு மாடியில கொண்டு போய் போட்டுட்டு அங்க இருந்து எஸ்கேப் ஆகிருக்கான் காஜா உசேன். செல்போன் சிக்னல வச்சு காஜா உசேன பிடிச்சு விசாரிச்சப்பதான் இந்த மொத்த உண்மையும் வெளிச்சத்துக்கு வந்துச்சு. அடுத்து, அவன் மேல மர்டர் கேஸ் ஃபைல் பண்ண சப்லகட்டா போலீசார், காஜா உசேன அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சிட்டாங்க. இதையும் பாருங்கள் - காதலன் முகத்தில் தாலியை வீசியெறிந்த காதலி