தலை முழுவதும் ரத்தம் வழிந்த படி வீட்டு வாசலில் நின்று அழுத இளம்பெண்... வீட்டிற்குள் சென்ற பொதுமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி... உடல் முழுவதும் காயங்களுடன் சடலமாக கிடந்த தாய்... ஆட்டோவில் தப்பி ஓடிய நபரை வலை வீசி தேடி வரும் போலீஸ்... தாயை கொலை செய்யும் அளவுக்கு குடும்பத்தில் என்ன பிரச்னை ஏற்பட்டது? பின்னணி என்ன?வீட்டு வாசலில் நின்ற சோனிதலை ஃபுல்லா ரத்தம் வழிந்த படி வீட்டு வாசல்ல நின்ன சோனி-ங்குற இளம்பெண், கத்திக் கதறி அழுதுருக்காங்க. இதபாத்து பதறிப்போன பொதுமக்கள் சோனி கிட்ட என்னாச்சு, எதுக்கு உன் தலை ஃபுல்லா ரத்தமா இருக்குன்னு கேள்வி கேட்டுருக்காங்க. அடுத்து சோனியோட வீட்டுக்குள்ள ஓடிப்போய் பாத்துருக்காங்க பொதுமக்கள். அங்க சோனியோட தாய் ஹூசைனா உடல் ஃபுல்லா காயங்களோட உயிரிழந்து கிடந்துருக்காங்க. அதுக்கப்புறம் சோனி கிட்ட, உங்க அம்மா எப்படி உயிரிழந்தாங்கன்னு விசாரிச்சுருக்காங்க பொது மக்கள். அதுக்கு சோனி, அம்மாவ அடிச்சுக் கொன்னுட்டு, எங்க அப்பா ஆட்டோவுல தப்பிச்சு போய்ட்டாருன்னு சொல்லி அழுதுருக்காங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சாங்க. அடுத்து சிவகுமார் எங்க தப்பிச்சு போனாருன்னு தெரிஞ்சுக்க அந்த ஏரியாவுல உள்ள மொத்த சிசிடிவி காட்சிகளையும் எடுத்து ஆய்வு பண்ணிருக்காங்க போலீஸ். ஆனா அதுல எந்த ஒரு துப்பும் கிடைக்கல.ஹுசைனாவுக்கு சிவக்குமார் என்பவருடன் பழக்கம்சிவக்குமாரோட ப்ரண்ட்ஸ், சொந்தக்காரங்க வீடுன்னு எல்லா இடத்துக்கும் போய் தேடிப் பாத்துருக்காங்க போலீஸ். அதுலையும் சிவக்குமார பத்தி எந்த ஒரு துப்பும் கிடைக்கல. அடுத்து மகள் சோனி கிட்ட எதுக்காக உங்க அப்பா, உங்க அம்மாவ கொலை செஞ்சாரு, ரெண்டு பேருக்கு இடையில என்ன பிரச்னை ஏற்பட்டிச்சுன்னு போலீஸ் விசாரிக்க ஆரம்பிச்சாங்க.ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதிய சேந்தவங்க ஹுசைனா. கணவன் கூட ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால இவங்க ரொம்ப வருஷமா தனியா தான் வாழ்ந்துட்டு இருந்துருக்காங்க. இவங்களுக்கு 19 வயசுல சோனின்னு ஒரு மகள் இருக்காங்க. இதுக்கிடையில ஹுசைனாவுக்கும் அதே பகுதியை சேந்த ஆட்டோ ஓட்டுநர் சிவக்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கு.சோனிக்கு 2வது திருமணம் செய்து வைக்க முயன்ற தாய்அதுக்கப்புறம் சிவக்குமார், ஹூசைனா, சோனின்னு எல்லாரும் ஒரே வீட்ல வசிக்க ஆரம்பிச்சுருக்காங்க. கொஞ்சம் மாசத்துக்கு முன்னாடி சோனிக்கு காதல் திருமணம் நடந்துருக்கு. ஆனா கணவன் கூட ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால சோனியும் அவர பிரிஞ்சு தாய் வீட்டுக்கே வந்துருக்காங்க. கணவன் கூட சேர்ந்து வாழும்படி ஹூசைனா தன்னோட மகள் கிட்ட பல முறை பேசிப் பாத்துருக்காங்க. ஆனா சோனி, நான் காதலிச்சு கல்யாணம் பண்ணி ஏமாந்துட்டேன், அவன் நல்லவன் கிடையாது, இனிமே அவன் கூட நான் வாழ மாட்டேன், எனக்கு வேறொரு கல்யாணம் பண்ணி வைன்னு தாய் கிட்ட சொல்லி அழுதுருக்காங்க. மகள் அழுதத பாத்து நொந்துபோன தாய், சிவக்குமார் கிட்ட நடந்த எல்லா விஷயத்தையும் சொல்லிருக்காங்க. அடுத்து சோனிக்கு ஒரு நல்ல இடத்துல மாப்பிளை பார்க்கும் படியும் சிவக்குமார் கிட்ட தெரிவிச்சுருக்காங்க.ஹுசைனாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட சிவக்குமார்அதுக்கு சிவக்குமார் நானே நிறைய பிரச்னையில இருக்கேன், இதுல சோனிக்கு வேற மாப்பிளை பாக்க சொல்ற, உன் முதல் கணவருக்கு பிறந்த சோனிக்கு நான் எதுக்கு மாப்பிள்ளை பாக்கனும், என்னால அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க முடியாது, அவள ஒழுங்கா முதல் கணவனோட சேந்து வாழச் சொல்லுன்னு சண்டை போட்ருக்காரு. அதே மாதிரி நான் உன்னையும் நோட் பண்ணிட்டே தான் இருக்கேன். வரவர உன்னோட நடவடிக்கையே சரியில்ல, நீ எப்பவும் ஃபோனும் கையுமாவே இருக்க, யாரு கூடவும் தகாத உறவுல இருக்கியான்னு கேட்டு ஹூசைனாவ போட்டு சரமாரியா அடிச்சுருக்காரு. இதனால ரெண்டு பேருக்கும் இடையில அடிக்கடி பிரச்னை ஏற்பட ஆரம்பிச்சுருக்கு. சம்பவத்தன்னைக்கு நைட்டு மறுபடியும் சோனியோட திருமணம் விவகாரம் தொடர்பா ரெண்டு பேருக்கு இடையில பிரச்னை ஏற்பட்டிருக்கு. வலை வீசி தேடும் போலீஸ்அப்ப ஹூசைனாவ போட்டு சரமாரியா தாக்கிருக்காரு சிவக்குமார். அந்த நேரத்துல ஹூசைனா கத்தி கூச்சல் போட்ருக்காங்க. இத கேட்ட சோனி, தாயோட அறைக்கு ஓடி போய்ருக்காங்க. அப்ப ஹூசைனாவோட கழுத்த நெரிச்ச சிவக்குமார் அவங்கள துடிதுடிக்க கொன்னுருக்காரு. தாய் உயிரிழந்து கிடந்த கோரத்த பாத்து சோனியும் கத்தி பக்கத்துல உள்ளவங்கள உதவிக்கு கூப்டுருக்காங்க. இதனால கடும் கோபமான சிவக்குமார் வீட்ல இருந்த உலக்கைய வச்சு சோனியோட மண்டையில ஓங்கி அடிச்சுட்டு ஆட்டோவுல ஏறி தப்பிச்சு போய்ட்டாரு. ஆனா சோனி மூலமா எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ் தலைமறைவா இருக்குற சிவக்குமார வலைவீசி தேடிட்டு இருக்காங்க.இதையும் பாருங்கள் - 9 மாதத்திற்கு பின் சிக்கிய கள்ளக்காதல் ஜோடி