அரபிக்கடலில் விபத்தில் சிக்கிய படகில் தவித்த 9 பேரை இந்திய கடலோர காவல்படை பத்திரமாக மீட்டது. குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்திலிருந்து ஏமனை நோக்கி புறப்பட்ட தாஜ் தாரே ஹராம் என்ற இந்திய படகு, நடுக்கடலில் விபத்தில் சிக்கி மூழ்க தொடங்கியது. இதையடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மீட்கப்பட்டனர்.