9-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதி ஆட்டத்தின் முதல் பாதியிலேயே 3 கோல்கள் அடித்து இந்திய அணி ஆதிக்கம் செலுத்திய நிலையில், ஆட்டத்தின் இறுதி வரை ஜப்பான் அணி 1 கோல் மட்டுமே அடித்தது.