நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது. முதலில் பேட்டிங் விளையாடிய நியூசிலாந்து அணி 232 ரன்கள் அடித்த நிலையில், பின்னர் களமிறங்கிய இந்திய அணி 44.2 ஓவர்களில் 236 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.