உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி இன்று கோலாகலமாக தொடங்குகிறது. மகா சிவராத்திரி திருநாளான பிப்ரவரி 26-ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து சுமாா் 35 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கபடுகிறது.