தண்ணீர் தொட்டியில் சடலமாக கிடந்த தாய். தொட்டியின் அருகே வளையல் உடைந்து கிடந்ததால் சந்தேகமடைந்த போலீஸ். சடலத்தை போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வைத்த காவலர்கள். கழுத்து மற்றும் உடலில் காயங்கள் இருந்ததாக வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட். தாயை கொலை செய்த நபர்கள் யார்? பின்னணி என்ன?ஹரியானாவுல உள்ள யமுனாநகர் ஷியாம்பூர் பகுதிய சேந்த சர்பஞ்ச் ஜஸ்பீர் சிங் - பல்ஜிந்தர் தம்பதிக்கு கோமித் ரதின்னு ஒரு மகன் இருக்கான். இந்த தம்பதி தங்களோட மகன் கோமித் ரதிய நல்லபடியா படிக்க வச்சுருக்காங்க. ஆனா கோமித் ரதி, தாய் சொல்பேச்ச கேட்க மாட்டான்னு கூறப்படுது. பெற்றோர் கிட்ட சொல்லாம ப்ரண்ட்ஸ்களோட சேந்து ஊர் சுத்துறது, ஊதாரித்தனமா பணத்த செலவு பண்றதுன்னு இருந்துருக்காரு. இதனால பல்ஜிந்தருக்கு, தன்னோட மகன சுத்தமா பிடிக்கல. இவங்க ரெண்டு பேருக்கு இடையில அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுட்டே இருந்துருக்கு. இதுக்கிடையில கோமித் ரதி, அதே பகுதிய சேந்த ஒரு பெண்ண காதலிச்சுருக்கான். அந்த பெண் கூட பீச், ஹோட்டல்ன்னு ஊர் சுத்திட்டும் மகிழ்ச்சியா இருந்துருக்கான். இந்த விஷயத்த கேள்விப்பட்ட பல்ஜிந்தர் தன்னோட மகன கடுமையா கண்டிச்சுருக்காங்க.நீ அடிக்கடி ஃபோன் பேசிக்கிட்டு இருக்கும்போதே நினைச்சேன், இந்த மாதிரி பிரச்னைய இழுத்துட்டு வருவன்னு, படிக்க வேண்டிய வயசுல எதுக்கு லவ் பண்ணி உன்னோட எதிர்காலத்த கெடுத்துக்கிற, ஒழுங்கா அந்த பெண் கிட்ட பேசுறத நிறுத்திட்டு, படிச்சு வாழ்க்கையில் முன்னேறுற வழிய பாருன்னு திட்டிருக்காங்க. அதுக்கு மகன், என்ன கேள்வி கேட்குறதுக்கு நீங்க யாரு, அவ ரொம்ப நல்லப் பொண்ணு, எனக்கு கல்யாணம்ன்னு ஒன்னு நடந்தா அது அந்த பெண் கூடதான், இல்லன்னா நான் யாரையும் கல்யாணமே பண்ண மாட்டேன், நீ என் காதலுக்கு தடையா இருந்தன்னா உன்னை கொலை கூட செய்வேன்னு மிரட்டிருக்காரு. இதனால மகன போட்டு தாய் சரமாரியா அடிச்சுருக்காங்க. ரெண்டு பேரும் கத்தி, சண்டை போடுறத கேட்ட அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க தாயையும், மகனையும் சமாதானப்படுத்திருக்காங்க.இதுக்கிடையில கோமித் ரதிய, அவங்க பெற்றோர் இங்கிலாந்துக்கு அனுப்பிருக்காங்க. ஆனா அங்க போனதுக்கு அப்புறமும் தாய்க்கும், மகனுக்கு இடையில தொடர்ந்து சண்டை ஏற்பட்டிருக்கு. டெய்லி ரெண்டு பேரும் ஃபோன்லையும் சண்டை போட்டுக்கிட்டே இருந்துருக்காங்க. மகன் தன்னோட காதல கைவிட முடியாதுன்னு விடாப்பிடியா இருந்துருக்காரு. அதே மாதிரி தாயும் மகனோட காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிச்சுட்டே இருந்துருக்காங்க. தாய் உயிரோட இருக்குற வர்ற அந்த பெண்கூட ஒன்னா சேர்ந்து வாழ முடியாதுன்னு நினைச்ச கோமித் ரதி, தன்னோட நண்பர்களான பங்கஜ் கூட சேந்த தாயை கொலை பண்ண திட்டம் போட்ருக்காரு. அதுபடி இங்கிலாந்துல இருந்து சொந்தக்காரங்க யாருகிட்டயும் சொல்லாம சொந்த ஊருக்கு திரும்புன கோமித் தன்னோட நண்பர் கூட சேந்து காலை நேரத்துல தங்களோட கால்நடை கொட்டகையில வந்து பதுங்கிருக்காரு.அந்த நேரத்துல பல்ஜிந்தர் தண்ணீர் எடுக்க அங்க வந்துருக்காங்க. அத பாத்த கோமித்தும் அவரோட நண்பரும் கையில கிடச்ச பொருட்கள எடுத்து தாயை சரமாரியா அடிச்சுருக்காங்க. ரெண்டு பேர் கிட்ட இருந்தும் தன்னை காப்பாத்திக்கிற, பல்ஜிந்தர் ரொம்ப போராடிருக்காங்க. பல்ஜிந்தரும் பதிலுக்கு தன்னோட மகன தாக்கிருக்காங்க. அப்ப அவங்க கையில அணிஞ்சுருந்த வளையல் எல்லாம் உடைஞ்சு சிதறிருக்கு. பல்ஜிந்தர் திருப்பி தாக்குனதால கடும் கோபமான கோமித்தும், அவரோட நண்பரும் அவங்கள கீழ தள்ளிவிட்டு, கழுத்த நெரிச்சுருக்காங்க. இதுல தாய் பல்ஜிந்தர் சம்பவ இடத்துலையே வலி தாங்க முடியாம துடிக்க துடிக்க உயிரிழந்துட்டாங்க. அடுத்து சடலத்த தரதரன்னு இழுத்துட்டு வந்து வீட்டு தண்ணீர் தொட்டியில போட்ட கோமித், தாய் தண்ணீர் தொட்டிக்குள்ள தவறி விழுந்து உயிரிழந்துட்டதா நாடமாடிருக்காரு. ஆனா வளையல் உடைஞ்சு கிடந்தத வச்சும், போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்ட வச்சும் இத கொலைன்னு கன்பார்ம் பண்ண போலீஸ், கோமித்தையும் அவரோட நண்பரையும் அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க.இதையும் பாருங்கள் - மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரம்