மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹோண்டா அமேஸ் நியூ வெர்ஷன் டிசம்பர் 4-ம் தேதி இந்திய சந்தையில் விற்பனைக்கு வருகிறது. இதற்கான முன்பதிவு ஏற்கெனவே தொடங்கி விட்ட நிலையில் ஹூண்டாய் ஆரா, மாருதி டிசையர் மற்றும் டாடா டிகோர் போன்ற கார்களுக்கு இது போட்டியாக அமையும் என கூறப்படுகிறது. புதுப்பிக்கப்பட்ட முன் கிரில் மற்றும் பம்பர், நேர்த்தியான இரட்டை பீம் LED ஹெட்லைட்கள் உட்பட பல புதுப்பிப்புகள் வழங்கப்படுகிறது.