பிரான்ஸ் நாட்டின் பாரீசில் உலகின் மிகப்பெரிய பனிச்சறுக்கு மைதானம் திறக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் சீசனுக்காக ஸ்கேட்டர்களை மகிழ்விக்கும் விதத்தில் 3 ஆயிரம் சதுர மீட்டரில் திறக்கப்பட்ட இந்த உட்புற பனிச்சறுக்கு மைதானம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்க உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஸ்கேட்டிங் செய்து குதூகலம் செய்தனர்.