அமெரிக்காவால் திருப்பி அனுப்பப்படும் மக்களுக்காக மெக்சிகோவில் மிகப்பெரிய அளவிலான கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சியுடாட் ஜுவரெஸ் (( Ciudad Juarez )) எல்லையில், அவர்களுக்கான கூடாரங்களுடன் குடிநீர், உணவு மற்றும் கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி தரப்படுகின்றன. அங்கிருந்து அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்து சேவையும் தயார் நிலையில் உள்ளன.