பாங்காக்கில் இருந்து தென் கொரியாவுக்கு வந்த விமானம் ரன்வேயில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 179 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லேண்டிங் கியரில் ஏற்பட்ட பிரச்சனையே தென்கொரிய விமான விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.ஒன்றல்ல, இரண்டல்ல 179 பேரின் உயிர்களை நொடிப்பொழுதில் பறித்துக்கொண்ட விமான விபத்தின் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் தான் இவை...தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 175 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் ஜேஜூ ஏர் ((Jeju Air)) நிறுவனத்தின் விமானம் ஒன்று தென்கொரியாவின் முவான் நகருக்கு வந்தது. அந்த விமானம் முவான் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தபோது லேண்டிங் கியரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பின்புற டயர் வெளியே வராமல் ஓடுதளத்தில் முழுவதும் தரையிறங்கிய விமானம், தரையில் உரசி கொண்டே நிற்காமல் சென்று சுற்றுசுவரில் மோதி விமானம் வெடித்துச் சிதறியது. விபத்தை தொடர்ந்து விரைந்த மீட்பு படையினர், வெடித்து சிதறி விமானத்தில் பற்றி எரிந்த தீயை அனைத்து மீட்பு பணியை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த கோர விபத்தில் சிக்கி 85 பேர் உயிரிழந்ததாக முதற்கட்டமாக தகவல் வெளியானது. அடுத்த சில மணி நேரத்தில் விமனத்தில் பயணித்த 181 பேரில், ஒரு ஆண், ஒரு பெண் என இருவரை தவிர்த்து 179 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.https://www.youtube.com/embed/YYigtK6wdosஇந்த கோர விபத்தை தொடர்ந்து முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் விமான விபத்தை சமாளிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக ஜேஜூ ஏர் நிறுவன சி.இ.ஓ. கிம் இ-பே தெரிவித்துள்ளார். இதன்படி ஜேஜூ விமானத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, கிம் இ-பே, ஒரு தொலைக்காட்சி பேட்டியின் போது, உயிரிழந்தவர்களின் குடும்பங்களிடம் தலைகுனிந்து விபத்துக்கு மன்னிப்பு கோரினார்.மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ விசாரணைக்காக தாங்கள் காத்திருக்க வேண்டும் என்றும், விபத்துக்கு காரணம் எதுவாக இருந்தாலும், தலைமை நிர்வாக அதிகாரியாக தான் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.