4 நாள் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் இன்று இந்தியா வருகிறார். இரு நாடுகளுக்கு மத்தியிலான இரண்டு முக்கியத் திறன் மேம்பாட்டு ஒப்பந்தங்களை கையெழுத்திட வரும் அவர் 18ஆம் தேதி வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்வார். அப்போது குடியரசு தலைவர் முர்மு மற்றும் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.