இந்தியன் வெல்ஸ் ஓப்பன் டென்னிஸ் தொடரின் காலிறுதிச் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வியடைந்து வெளியேறியது. அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்த தொடரில், ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி - ஸ்வீடனின் ஆண்ட்ரே கோரன்சன் ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஜான் பாட்ரிக் - பிரேசிலின் பெர்னாண்டோ ராம்போலி ஜோடியுடன் மோதியது. இதில், 6 க்கு 7, 6 க்கு 3, 10 க்கு 8 என்ற செட் கணக்கில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வியடைந்தது.