உக்ரைனுடன் போர் நடந்து வரும் சூழலில், ரஷ்ய ராணுவத்திற்கு இதுவரை இல்லாத அளவில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யாவில் 2025-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நாட்டின் ராணுவம் மற்றும் பாதுகாப்புக்கு சுமாா் 10 லட்சத்து 67 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய அதிபா் புதின் ஒப்புதல் அளித்துள்ளாா்.