தமிழக மக்களின் ஆன்மீக நம்பிக்கையை உலக அரங்கில் எதிரொலித்ததாக, பிரதமர் மோடிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். இந்தோனேசியா ஸ்ரீ சனாதன தர்ம ஆலய மஹா கும்பாபிசேக விழாவில் காணொளி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, முருகனுக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் உரையை தொடங்கினார்.