கேரளாவில், கோவில் திருவிழாவில் பக்தர்கள் சீண்டியதால் கோபமடைந்த கோவில் யானை, பாகன்களை தும்பிக்கையால் தூக்கி வீசியது. அச்சமடைந்த பக்தர்கள் தலைதெறிக்க சிதறி ஓடினர். வயநாடு மாவட்டம் புல் பள்ளி பகுதியில் உள்ள சீதா தேவி கோவிலில் திருவிழாவையொட்டி யானை அலங்கரிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த சிலர் யானையை சீண்ட கோபமடைந்த யானை திடீரென அங்கு நின்று இருந்த பாகனை தும்பிக்கையால் தூக்கி வீசி எறிந்தது. சிறிது நேரம் அங்கும் இங்கும் சுற்றிதிரிந்த யானை தன் மேல் அமர்ந்திருந்த மற்றொரு பாகனை கீழே தள்ளி தாக்க முயன்றது.