கேரளாவில் உயிரிழந்து கிடந்த புலியின் வயிற்றில் இருந்து கொல்லப்பட்ட பெண்ணின் கம்மல், தலைமுடி மற்றும் ஆடை போன்றவை கைப்பற்றப்பட்டதை அடுத்து, இது தேடப்பட்ட வந்த ஆட்கொல்லி புலிதான் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அந்த புலிக்கும் மற்றொரு புலிக்கும் ஏற்பட்ட சண்டை காரணமாக கழுத்தில் பலத்த காயமடைந்து இப்புலி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.