கர்நாடகா... வீட்டிற்குள் ஆயுதங்களுடன் சடாரென புகுந்த கும்பல். மாமனார், மாமியார் கண்ணெதிரிலேயே கர்ப்பிணி மருமகளை அடித்தே கொடூரன்கள். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பிடிக்க முயன்றும், கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியோடிய குண்டர்கள். விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி உண்மை. பெற்ற மகளை தந்தையே அடித்தே கொன்றது ஏன்? கொலையாளிகள் சிக்கினார்களா? கர்நாடகா மாநிலம், தார்வாட் பகுதிய சேர்ந்த 20 வயசான மான்யாவும், அதே கிராமத்த சேர்ந்த விவேகானந்தாவும் ஒருத்தருக்கு ஒருத்தர் காதலிச்சிட்டு இருந்துருக்காங்க. மகளோட காதல் விஷயம் தெரிஞ்சு, மான்யாவோட அப்பா பிரகாஷ் கோவப்பட்டிருக்காரு. அதுக்கு முக்கிய காரணம், விவேகானந்தா வேற சாதிய சேர்ந்தவரு. என்ன நடந்தாலும், வேற சாதி பையனுக்கு என் பொண்ண கட்டிக் கொடுக்க மாட்டேன்னு பிரகாஷ் பிடிவாதமா இருந்துருக்காரு. அதே மாதிரி மான்யாவும் தன்னோட காதல்ல உறுதியா இருந்துருக்காங்க. இதனால அப்பாவுக்கும், மகளுக்கும் இடையில அடிக்கடி மோதல் ஏற்பட்டிருக்கு. பிரகாஷுக்கு மான்யாவோட சேத்து மொத்தம் 3 பெண் பிள்ளைங்க இருக்காங்க. மூத்த பொண்ணுக்கு கல்யாணமாகிருச்சு. ரெண்டாவது மகள் தான் இந்த மான்யா.மான்யா வேற சாதி பையன கல்யாணம் பண்ணிக்கிட்டா, அடுத்து இருக்குற இன்னொரு பொண்ணோட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுருமேன்னு நினச்சு பிரகாஷ் ரொம்பவே பயந்துருக்காரு. உனக்காக இல்லன்னாலும் பரவாயில, உன் தங்கச்சிங்களுக்காக-வாவது இந்த காதல குழி தோண்டி புதச்சிருன்னு எவ்வளவோ சொல்லி பாத்தும் மான்யா அத கேட்கல. தன்னோட மகள் வேற சாதி பையன கல்யாணம் பண்ணிக்கிட்டா ஊர் முன்னாடி தலை குனிஞ்சு நிக்க வேண்டியிருக்கும், அதுக்கு பேசாம மகளுக்கு மாப்பிள்ளைய பாத்து கல்யாணம் பண்ணி வச்சிரலாம்னு முடிவு பண்ணிருக்காரு பிரகாஷ். அந்த நேரத்துல, மான்யாவும், விவேகானந்தும் வீட்டைவிட்டு வெளியேறி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. இந்த விஷயம் பிரகாஷுக்கு தெரியவந்ததும் கொந்தளிச்சிருக்காரு. இதே ஊர்ல இருந்த எங்க அப்பா கொலை செய்யவும் துணிய மாட்டாருன்னு மான்யா சொல்லவே, விவேகாந், மான்யாவ கல்யாணம் பண்ணிக்கிட்ட கையோட அவங்கள வெளியூருக்கு கூப்பிட்டுக்கிட்டு போய் குடும்பம் நடத்திட்டு இருந்துருக்காங்க. கொஞ்ச நாட்கள மான்யாவும் கர்ப்பமாகிட்டாங்க. இந்த சூழல, குழந்தை பிறந்துட்டா அப்பா நம்ம காதல ஏத்துக்கிட்டு குடும்பத்துல சேத்துப்பாருன்னு நினைச்ச மான்யா, குடும்பத்தோட ஹூப்பள்ளிக்கு வந்துருக்காங்க. அங்க ஒருவீட்ட வாடகைக்கு எடுத்து மாமியார், மாமனார், கணவர்கூட வாழ்ந்துட்டு வந்துருக்காங்க மான்யா. மகள் மறுபடியும் ஊருக்கு வந்துருக்காங்குற விஷயம் பிரகாஷோட காதுக்கு போயிருக்குது. இது தெரிஞ்சதும் பிரகாஷ் கோவத்துல கொந்தளிச்சிருக்காரு. அதுமட்டுமில்லாம மகள் ஆறு மாசம் கர்ப்பமா இருக்கா அப்டிங்குற விஷயம் தெரிஞ்சதும் அவருக்கு உச்சக்கட்ட கோவத்த ஏற்படுத்திருக்குது. வேற சாதி பையன கல்யாணம் பண்ணது மட்டுமில்லாம குழந்தையும் பெத்துக்கிட்டாலேன்னு மகள் மேல ஆத்திரமடைஞ்சிருக்காரு பிரகாஷ். அதனால, மகள் மான்யவ கொலை செய்ய திட்டம் போட்ட பிரகாஷ் தன்னோட நண்பர்கள் மூணு பேரோட மான்யாவோட வீட்டுக்கு போயிருக்காங்க. கையில ஆயுதங்களோட போன பிரகாஷும் அவரோட ஃபிரன்ட்ஸும் சேர்ந்து மான்யாவ அடிச்சே கொன்னுருக்காங்க. விசாரணையில மொத்த உண்மையும் தெரிய வரவே கர்ப்பிணின்னு கூட பாக்காம பெத்த மகள அடிச்சு கொலை செஞ்ச பிரகாஷ அரெஸ்ட் பண்ண போலீஸ் அவர்கிட்ட தொடர்ந்து விசாரணை நடத்திட்டு இருக்காங்க.