அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய மக்களை நாடு கடத்தும் பணி தொடங்கி உள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்ட வெள்ளை மாளிகை, அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவினால், கடுமையான பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்துள்ளது.