போர் நிறுத்தத்திற்கு பிறகும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவத்தினர் வெளியேறாமல் இருக்கும் நிலையில் மக்கள் தங்கள் வீடுகளுக்குள் நுழைய முயன்றதால் பதற்றமான சூழல் நிலவியது. போர்நிறுத்த ஒப்பந்ததம் நிறைவேறினாலும் தெற்கு லெபனானில் சிறிது காலம் ராணுவ வீரர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்றும், குடியிருப்பாளர்கள் எவரும் திரும்ப வேண்டாம் என இஸ்ரேல் கூறியது.