கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளில் காலை நேரத்தில் கடும் பணி மூட்டம் நிலவியதால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. குறிப்பாக அதிகாலை இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் முகப்பு விளக்குளை எரியவிட்டபடி சென்றனர்.