திமுக அரசுக்கு எதிரான ஒத்த மன நிலையில் உள்ள எந்த கட்சியும், அதிமுக கூட்டணியில் சேரலாம் என, மீண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் உள்ளூர் வளர்ச்சித் திட்ட நிதியின் மூலம் 3 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெக தூய சக்தியா என மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார். மேலும், போலி வாக்காளர்களை நம்பியே இத்தனை ஆண்டு காலம் திமுக வெற்றி பெற்று வந்ததாகவும், திமுகவின் எண்ணம் எஸ்.ஐ.ஆர்.க்கு பின் இனி ஈடேறாது எனவும் இபிஎஸ் சாடினார்.